கொழும்பு மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.
இந்தப் புதைகுழி வழக்கமான புதைகுழி அல்ல என்றும் உடல்கள் புதைக்கப்பட்ட விதம் அவை கொலை செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,
இந்த நிகழ்வுகளுக்கான காலப்பகுதியை விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, அறிக்கைகள் வழங்கப்படும்.
இதுவரை 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேரின் எலும்புக்கூடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சிறு குழந்தையின் கையில் செம்பு கலந்த ஏதோ ஒன்றால் கறை ஏற்பட்டதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க மற்றும் துறைமுக காவல்துறையின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.ஜயரத்ன அவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிக்குப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது