சீதாவாக்க ஒடிஸி சொகுசு ரயில் இனி சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும்

Yadu
Report this article
சீதாவாக்க ஒடிஸி சொகுசு ரயில் ஒகஸ்ட் 5 ஆம் திகதி முதல் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட சீதாவாக்க ஒடிஸி கொழும்புக்கும் அவிசாவளைக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கி வருகிறது.
ரயிலை இயக்குவதற்கு தீர்மானம்
எவ்வாறாயினும் அதிக தேவை காரணமாக இலங்கை ரயில்வே மற்றும் மேல் மாகாண சுற்றுலா சபை ஆகியன எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் சனிக்கிழமைகளில் ‘ஷனிதா சீதாவாக்க ஒடிஸி’ என்ற பெயரில் ரயிலை இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத்தலமான சீதாவாக்கவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ரயில் தொடங்கப்பட்டது.
சீதாவாக்க ஒடிஸியை பயன்படுத்தும் நபர்கள் சீதாவாக்க தாவரவியல் பூங்கா, கலடுவாவ நீர்த்தேக்கம், லபுகம நீர்த்தேக்கம், ரன்முடு எல்ல மற்றும் குமரி எல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் ஊடாக செல்ல முடியும்.