உலகை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து; மூன்று ஊழியர்கள் கைது
இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர், சிக்னல் பிரிவின் ஊழியர்களின் தவறை வெளிப்படுத்தியிருந்தார்.
295 பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்
அதன்படி, மூவரின் செயல்கள் விபத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 2-ம் திகதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது.
இந்த விபத்தில் , எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தடுடதன் 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.