ஓட்டமாவடி பகுதியில் பயங்கர விபத்து! உணவுப் பொருட்கள் சேதம்
மட்டக்களப்பு - பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தியாவட்டவான் பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-08-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாவலடியில் இருந்து ஓட்டமாவடி நோக்கி வருகை தந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி முன்னால் உள்ள உணவு கடை ஒன்றின் முன் பகுதியில் துவிச்சக்கர வண்டி மோதியுள்ளது.
குறித்த விபத்தில் அக்கடையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், தளபாடங்கள் சேதமாகியுள்ளன அத்தோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பகுதியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதன் போது யாருக்கும் எவ்வித காயங்களோ ஆபத்துக்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.