பொலிஸ் ஜீப் மீது ஆபாச வார்த்தை; தலைமறைவான தலைமை பொலிஸ் பரிசோதகர்!
ஜா-அல பொலிஸ் நிலையத்தின் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது ஆபாச வார்த்தைகளை எழுதியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கானநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரான தலைமை பொலிஸ் பரிசோதகர் தற்போது பணிக்கு வராமல் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைரேகைகள் பெறப்பட்டு ஆய்வு
பொலிஸ் ஜீப்பில் ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் கைரேகைகள் மற்றும் ஜீப்பில் இருந்த கைரேகைகள் பெறப்பட்டது.
பொலிஸ் ஜீப்பில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைகள் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கைரேகைகள் மற்றும் ஜீப்பில் இருந்து மீட்கப்பட்ட கைரேகைகள் ஒன்றுக்கொன்று ஒத்ததாக காணப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் ஜீப்பில் ஆபாசமான வார்த்தைகள் குறியிடப்பட்ட ஆயுதம் மூலம் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமைப் பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .