பாடசாலை மாணவியிடம் தொலைபேசியில் ஆபாச உரையாடல்... ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
கம்பஹா மாவட்டம், திவுலபிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியிடம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாச உரையாடலில் ஈடுபட் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் உறவினர் ஒருவரால் மினுவாங்கொட காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டு திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆசிரியர் பாடசாலையின் 11 ஆம் வகுப்பு மாணவியுடன் கையடக்கத் தொலைபேசி மூலம் பல்வேறு ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், கையடக்கத் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண புகைப்படங்களைப் பார்த்ததாகவும், மாணவியின் உறவினர் ஒருவர் மினுவாங்கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை இறந்துவிட்டதாகவும் , தாய் வெளிநாட்டில் பணிபுரிபவர் என்றும் மேலும் சிறுமி தனது உறவினரின் பாதுகாவலில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
மாணவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக அவருடைய உறவினர் மாணவியின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்டுள்ளார்.
இதன்போது ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் அம்மாணவிக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் மீது இதற்கு முன்பும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.