இலங்கையில் துப்பாக்கிசூட்டுக்கு உள்ளான யானைகளின் எண்ணிக்கை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில் 3 யானைகளும், வவுனியாவில் ஒரு யானையும், தெற்கில் 2 யானைகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், சிகிச்சைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கையில் 20 சதவீதமான யானைகளின் உயிரிழப்புகள், துப்பாக்கிச் சூடுகள் காரணமாகவே நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.