நடு வீதியில் நிர்வாணமாக சைக்கிளில் சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்
கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில், கந்தானை நகர மையத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நிர்வாணமாக சைக்கிளில் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், சந்தேக நபரின் சட்டை மற்றும் கால்சட்டை அவர் ஓட்டி வந்த மிதிவண்டியின் கைப்பிடியில் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயது சந்தேக நபர் கந்தானை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் வாகனம் ஒன்றின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியிருந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.