ஜனாதிபதி அநுரவை மந்திரவாதியாக மாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு மந்திரவாதி என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தனது முதல் உரையில் தாம் மந்திரவாதி அல்லவென ஜனாதிபதி கூறிய போதிலும், உண்மையில் அவர் மந்திரவாதி என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளின் எண்ணிக்கை
வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை விட நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகம்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்திய ஆகிய நான்கு மாகாணங்களிலும் ஒரே கட்சி பாரிய வெற்றியை பெற்றதன் மூலம் ஜனாதிபதி மந்திரவாதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மந்திரவாதி
வெற்றியின் பின்னர் ஜனாதிபதி தனது முதல் உரையில், நான் மந்திரவாதி இல்லை என்று கூறினார், ஆனால் அவர் ஒரு பொய்யை கூறினார்.
உண்மையில், அவர் ஒரு மந்திரவாதி தான். இலங்கையின் வரலாற்றில் ஒரு கட்சியினால் இவ்வாறான சாதனை வெற்றி பெற முடிந்துள்ளதாக, உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.