NPP மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்
நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாநகர சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த மாநகர சபை உறுப்பினர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் கெப் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி சாரதி வீதியை மறித்துள்ளாகவும், அங்கு இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில் மாநகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.