NPP அடக்குமுறை அரசாங்கம்; நாமல் ராஜபக்ச
தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சியினரையும் மஹா சங்கத்தினரையும் இலக்கு வைத்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
குறிப்பாகஇ கடந்த கால போராட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியவர்கள் இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகின்றனர்.
ராஜபக்சர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இனவாதம் பின்பற்றப்படவில்லை என தெரிவித்த நாமல் ராஜபக்ச , பௌத்த கலாசாரத்தைப் பாதுகாப்பது இனவாதம் ஆகாது என்றும் அவர் வலியுறுத்தினார்.