பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ”பெதி ரங்கா” கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெதி ரங்க” என அழைக்கப்படும் ஜம்புவாகே மதுரங்க சில்வா என்பவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெதியவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், இலத்திரனியல் தராசு , கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரான “பெதி ரங்க” என்பவர் களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தெதியவல பகுதியில் உள்ள “பெதி ரங்கவின் ”வீட்டை சோதனையிட்ட போது இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (25) களுத்துறை நீதவான் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.