பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (19) காலை முதல் பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி கிடைத்த பின்னர் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தமது பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் 283,616 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதோடு 2021-2022 ஆம் கல்வியாண்டில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.