வெளிநாட்டுக்கு வேலை செல்பவர்கள் தொடர்பான அறிவித்தல்
Sri Lanka
By Yadu
வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்பவர்கள் பற்றிய தொகை
இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US