சிகரெட் விற்பதில்லை ; தமிழர் பகுதியில் பலரின் கவனம் ஈர்த்த வாசகம்!
கிளிநொச்சி கடை ஒன்றில் பொறிக்கப்பட்ட வாசகம் அப்பகுதியால் செல்வோர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அங்கிருந்த வாசகம் தொடர்பில் பல்லரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.
சிகரெட் பாவனை, மனிதனை மெல்லமெல்ல கொல்லும் ஓர் விசகொல்லி ஆகும். இந்நிலையில் இலங்கையில் இளையோர் முதல் முதியர்வர் வரை பலரும் சிகரெட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
நாளொன்றுக்கு 60 பேர் மரணம்
நாளொன்றுக்கு இலங்கையர் 60 பேர் புகைத்தலினால் மரணமடைவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சிகரெட் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும், ஏன் தாம் அதனை விற்பனை செய்வதில்லை எனவும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு வாசகம் ஒன்றினை ஒட்டி வைத்துள்ளார்கள்.
அதில், நாளொன்றிற்கு இலங்க்லையர் 60 பேர் புகைத்தலினால் மரணமடைவதாலும், அதற்கு பதிலாக சிகரெட் கம்பனியானது சராசரி 60 சிறுவர்களை புதிதாக புகைக்க வைக்க முயற்சிப்பதாலும், எங்களை பயன்படுத்தி எமது நாட்டு மக்களின் பணத்தை சூறையாடி நாளொன்றுக்கு 38 கோடி ரூபாவீதம் பிரித்தானியா அமெரிக்காவுக்கு அனுப்புவதாலும்,
உதடு கருத்து வாயில் துர்நாற்றம் வீசும், முகம் அவலட்சணமாகும், பாலியல் பலவீனம் ஏற்பட்ட இளைஞர்கள் உருவாக காரணமாக சிகரெட் காரணமாக இருப்பதாலும் சிகரெட்டி தாம் விற்பதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விழிப்புணர்வு வாசகம், நம் வருங்கால சந்ததியின் நன்மை கருதி அவர்கள் செயல்பட்டவிதம், மற்றும் சமூக அக்கறை என்பன , குறித்த கடைக்காரரிற்கு பலரின் பாரட்டை பெற்றுக் கொடுத்துள்ளது.