அரசியலுக்கு வராமல் போயிருந்தால்... இப்படிதான் இருந்திருப்பேன்! சஜித்
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் தான் இன்று விமானியாக இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18-03-2023) கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாட்டை இயக்குவதற்கான அனைத்து இயந்திரங்களும் இயங்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும் எனவும் முறையான வேலைத்திட்டத்தின் மூலமே வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்த தரப்புமோ பிள்ளைகளுக்குக் கொடுத்த மதிய உணவை குறைக்குமாறு கோரவில்லை என்றும் சீருடைகளை வழங்குவதை தடை செய்யுமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சரியான பேச்சுவார்தைகளே அதற்குக் காரணம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று அது முறையாக நடக்காததுதான் காரணம் என்றும் தெரிவித்தார்.
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மின்கட்டணத்தை செலுத்தாத நிலைக்கு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.