ஐஸ்க்ரீம்களை சாப்பிட வேண்டாம்...எச்சரித்த கனேடிய சுகாதாரத்துறை
கனடாவில் உள்ள சில பிராண்டட் ஐஸ்கிரீம்களை திரும்பப் பெறுமாறு கனேடிய சுகாதாரத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
பல பிராண்டட் ஐஸ்கிரீம்களில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தில், கனேடிய சுகாதாரத் துறை அவற்றை திரும்பப் பெற அழைப்பு விடுத்துள்ளது. அக்ரோபூர் கூட்டுறவு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பாஸ்கின் அண்ட் ராபின்ஸ், பெஸ்ட் பை, பிரசிடென்ட் சாய்ஸ் மற்றும் ஸ்காட்ஸ்பர்ன் ஜாயின்ஸ் ஃபார்மர்ஸ் என்ற பெயர்களில் விநியோகிக்கப்படும் ஐஸ்க்ரீம்களில்தான் சிக்கல் உள்ளது.
இந்த ஐஸ்கிரீம்கள் கனடா முழுவதும் விநியோகிக்கப்படுவதால், பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருக்கலாம் என்பதால் அவற்றை உண்ணக் கூடாது என்று கனடிய உணவு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.