கொழும்பு கடற்கரைக்கு செல்ல இவற்றுக்கு அனுமதி இல்லை
சீனாவால் கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை பார்வையாளர்களுக்காக ல் திறந்து வைக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று வருகின்றனர்.
இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கை கடற்கரையில் விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலி முகத்திடல் இருந்து குறித்த கடற்கரைக்கு 3 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதனால் இந்த வசதி வழங்கப்பட்டது.
எனினும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை அசுத்தப்படுத்தி செல்வதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இதனையடுத்து தற்போது முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் செயற்கை கடற்கரையை பார்க்க சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.