வட மாகாண மக்கள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!
வடக்கில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருந்தவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த 2 வருடங்களிலே கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான பயணத்தட்டுப்பாட்டு காரணமாக வெகுவாக குறைந்திருந்தது.
ஆனால் தற்போது இந்த வருடம் வட மாகாணத்திலே டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலே வட மாகாணத்திலே 2 ஆயிரத்து 772 நோயாளர்கள் டெங்கு நோயுடன் இனங்காணப்படுள்ளார்கள்.
இதற்கிடையில் யாழ், மாவட்டத்தில் 2 ஆயிரத்து 187 பேரும் மன்னார் மாவட்டத்தில் 177 பேரும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 94 பேரும் வகிரவுனியா மாவட்டத்தில் 67 பேரும் முல்லைத்தீவு 47 இனங்காணப்படுள்ளார்கள்.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து முதல் 6 மாதங்களில் வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதியிலே அதிக மழைவீழ்ச்சி காணப்பட்ட்து.
எனவே ஜனவரி மாதத்தில் ஜூன் மாதம் வரை அதிகளவு டெங்கு நோயாளர்கள் வட மாகாணத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக ஜனவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் வட மாகாணத்தில் இனங்காணப்படுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இதுவரை 8 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உடுவில் 2, யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, நல்லூர், வேலணை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவில் தலா ஒரு நோயார்கள் வீதம் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நோய் நிலைமை முற்றிய பின்னர் வைத்தியசாலைகளை நாடிய காரணத்தினாலேயே, இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
அரச வைத்தியசாலைகளில் நவீன சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது என்றார்.