வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் புகார்கள்; ஆளுநர் உத்தரவு
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

முறைப்பாடுகள்
தமக்கு நெருங்கியவர்களின் விசாரணைகளை அதிகாரிகள் கிடப்பில் இட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில், அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்யுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளில் தேவையற்ற வகையில் பணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.