அசைவ பிரியர்கள் கவனத்தில் கொள்ளவும்; வாரம் மூன்று நாட்கள் மட்டும்தான்!
அசைவ பிரியர்கள் ஆடு ,கோழி சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவது உடலுக்கு நன்மை செய்யுமாம். உடலின் ஊட்ட சத்துக்கு மீன் மிகவும் நல்லது .
மீன் சாப்பிடுவது உடல் சோர்வு மற்றும் மன சோர்வை குறைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இதயத்துக்கு மீன் சாப்பிடுவது நல்லது .
அது மட்டுமல்லாமல் கூறிய கண் பார்வை கிடைக்க செய்யும் தூக்கமின்மை பிரச்சினையையும் சரி செய்யும் . முடக்குவாத நோயை மீன் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம் .
அத்துடன் மீன் சாப்பிடுவதால் இன்று பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ள உடலின் கெட்ட கொழுப்புகள் இல்லாமல் செய்யுமாம் .
பல நோய்களைத் தடுக்கலாம்
1. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் பல நோய்களைத் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
2. ஆனால் வாரம் மூன்று முறை மீன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
3.மீனில் நிறைய கால்சியம் இருப்பதால் எலும்புக்கு நல்லது .மேலும் கால்சியத்துடன், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி போன்றவையும் மீனில் உள்ளது.
4.மீன் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
5. மேலும் மீனில் அதிகம் உள்ள ஒமேகா-3 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கும் நல்லது செய்கிறது