வெளியான தகவலில் உண்மையில்லை; மறுக்கும் ஜனாதிபதி அலுவலகம்
மத்திய வங்கி ஆளுநரின் பதவி குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையை தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என ஊகங்கள் வெளியாகியுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
சர்வதேச நாணயநிதியத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மத்திய வங்கி ஆளுநரை பதவிவிலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச நாணயநிதியம் மத்திய வங்கி ஆளுநரை பதவிவிலக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி வதந்தி என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேசநாணயநிதியம் அதிகாரிகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில்லை என்றும், நாணயவிடயங்கள் குறித்து மாத்திரமே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ,ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கி ஆளுநர் மீது முழுமையான நம்பிக்கையுள்ளதாகவும், அவரை பதவி விலகுமாறு கேட்பதற்கான காரணம் எதுவுமில்லை எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
மத்திய வங்கி ஆளுனர் மீது அதிரடி நடவடிக்கை; ஜனாதிபதி கோட்டாபய