ராஜபக்ச குடும்ப சகவாசமே வேண்டாம்; நாமலின் எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்ட விமல் வீரவன்ச
இனி ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது ,விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.
அத்துடன் , ராஜபக்ச அணியுடன் இணைந்து மீண்டும் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லை என்றும், எதிர்காலத்தில் இந்த குழுவுடன் அரசியல் முன்னணியில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எதிர்காலம் குறித்து கூறிய விமல் வீரவன்ச, தற்போதைய சூழ்நிலையின் விளைவாக நாமல் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட முடியும் என தான் நம்பவில்லை எனவும் கூறினார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாமல் ராஜபக்சவுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அது அவரது எதிர்கால அரசியல் பயணத்தை பாதிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்