அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்த பிரச்சினையும் இல்லை! நீதி அமைச்சர்
அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருந்தால் தமிழ் கைதிகளை வேறு இடங்களுக்காே அல்லது அதி பாதுகாப்பு பிரதேசங்களுக்கோ மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக அவர்களின் உறவுகள் வந்து பார்ப்பதற்கு வசதிக்காகவே யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறைச்சாலைக்களுக்கு மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் என நீதி அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த நீதி அமைச்சர், அங்கு அதிகாரிகளுடனும் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.