ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கப்படுமா?
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்றால் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெரும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மட்டுமே கிடைக்கும். அங்கு பரிசுத் தொகை எல்லாம் கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களின் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு கொடுப்பது மட்டுமே அவர்களுக்கான பரிசுத் தொகையாகும்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் இந்த வார இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், நமது அயல் நாடான இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கப்பதக்கம்கூட வெல்லவில்லை.
மேலும், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மட்டும் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) எந்தப் பரிசுத் தொகையையும் வழங்குவதில்லை.
எனினும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த நாடு, சொந்த மாநிலங்கள் மற்றும் அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகள் பரிசுத் தொகையை அறிவிக்கும்.
இந்தியாவில், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் கணிசமாக சிறப்பு பரிசுத் தொகைகளை பெறுகிறார்கள்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பெரும்பாலும் அரசாங்க வேலைகள், வீடுகள் போன்றவை இந்திய மத்திய மாநில அரசுகளால் கொடுக்கப்படுகின்றன.