இலங்கையில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி போட்ட யாவரும் இறக்கவில்லை!
தடுப்பூசியை போடுவதால் ரத்தம் உறைவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த தடுப்பூசி போடுவதை சில ஐரோப்பிய நாடுகள் சிறிதுகாலம் நிறுத்தின.
இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது.
அதைத் தொடர்ந்து கடந்த மாத துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிய இலங்கை, இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு மேலும் லட்சக்கணக்கான டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட தடுப்பூசியை போடுவதால் ரத்தம் உறைவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த தடுப்பூசி போடுவதை சில ஐரோப்பிய நாடுகள் சிறிதுகாலம் நிறுத்தின.
ஆனால் அந்த தடுப்பூசி போடுவதால் ஆபத்தில்லை, அதை தொடரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை அறிவித்தன. அதைத் தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியை ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொடங்கின.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு புத்த துறவி உள்பட 3 பேர் இறந்தனர்.