இலங்கைக்கு தொடர்பில் உலக வங்கியின் கடுமையான நிலைப்பாடு
பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கி இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதென உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு புதிய அவசரக் கடன் அல்லது வேறு கடன் உறுதிப்பாடுகளை வழங்குவதற்கு உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் வங்கி கூறியுள்ளது.
உலக வங்கி, இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும் இலங்கையில் அவசியமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை, அந்த நாட்டுக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமிடவில்லை என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப் பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம்.” என உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.