இனி பயத்தில் வாழ்க்கை இல்லை ; அபாய வலய குடும்பங்களுக்கு நிரந்தர விடுதலை
2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து வலயத்தில், எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவுதற்காக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட, 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கு முன்பதாக, அபாய வலயங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை டித்வா புயலால் வீடுகளை இழந்த மற்றும் வீடுகளில் மீள குடியேற முடியாத 17 ஆயிரத்து 648 குடும்பங்களை, கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்காக 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
டிட்வா சூறாவளியால், 6,228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4, 543 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த வீடுகளுக்கு செல்ல முடியாது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ZULG9YF