இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; அடுத்துவரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!
அடுத்த சில நாட்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் வரை 100 மெட்ரிக் தொன் எரிபொருளை பெற்றுக்கொண்டதையடுத்து மின்சார சபையினால் எவ்வித இடையூறும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடிந்த தாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
இதன் காரணமாக, திட்டமிட்ட மின்வெட்டு நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மின்வெட்டை நிறுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.