மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா!(Video)
பிரபல தமிழ் இயக்குனர் மோகன் ஜிக்கு வாழ்த்து தெரிவித்து நித்யானந்தா வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அந்த வீடியோவுக்கு தனது நன்றிகள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி
‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன் பிறகு இவரது இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ ஆகிய படங்கள் வெளியகீருந்தது.
இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள், பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது.
இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ,
வள்ளல மகாராஜரின் நூல் வெற்றிகரமாக வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.?
— KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) March 8, 2023
- SPH நித்யானந்த பரமசிவம்@mohandreamer #kailasa #nithyananda pic.twitter.com/Zj3GnF52gF
‘வள்ளல் மகாராஜரின் நூல் வெற்றிகரமாக வெளி வந்ததற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இதனை முகநூலில் பகிர்ந்த மோகன் ஜிக்கு தனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நித்யானந்தாவின் வாழ்த்தும் மோகன் ஜி நன்றியும் சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.