நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிருபமா ராஜபக்ச நேற்றிரவு 10.25 அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-655 என்ற விமானத்தில் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நிருபமா ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினரின் நெருங்கி உறவினர். இவரும் இவரது கணவர் திருகுமார் நடேசனும் முறைகேடனான நிதி கொடுக்கல், வாங்கல், வருவாய் சான்றுகள் இல்லாத பெருந்தொகையான பணம் மற்றும் சொத்துக்கள் கொண்டுள்ளதாக சர்வதேச ரீதியில் பரப்பரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிருபமா ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.