இரவு விடுதி விவகாரம்; பொலிஸ் நிலையத்தில் யோஷித ராஜபக்ஷ மற்றும் மனைவி
கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக , முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவன் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இரவு நடந்ததாகவும், அதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரி வைத்தியசாலையில்
காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களை பொலிசார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரவு விடுதியின் முன் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவினர் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து யோஷித மற்றும் அவரது மனைவி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.