சிறைக்குள் இரவில் சோதனை ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கைதிகள்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது ஸ்மார்ட் கடிகாரங்கள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்டுபிடிக்கப்பட்ட 27 கையடக்க தொலைபேசிகளில் 07 ஸ்மார்ட் தொலைபேசிகளும், போதைப்பொருட்களில் திருடப்பட்ட ஐஸ் மற்றும் கஞ்சாவும் ரக போதைப்பொருட்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இதேவேளை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் J வார்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 04 கையடக்க தொலைபேசிகளும், M2 வார்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 07 கையடக்க தொலைபேசிகள், ஒரு ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் பிற கையடக்கத் தொலைபேசிகள், அத்துடன் பல்வேறு போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறிமுதல் செய்யப்பட்ட குறித்த பொருட்கள் அனைத்தும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரண்டு வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள தொலைபேசி இலக்கங்களை கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.