இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடி!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, ஹைலண்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாயினாலும், ஒரு கிலோகிராம் பால்மா விலை 225 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹைலண்ட் 400 கிராம் பால்மாவின் விலை 470 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 1,170 ரூபாயாகவும் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, பெல்வத்த நிறுவனமும் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், 400 கிராம் பால்மா விலை, தற்போது 460 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாயினால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தற்போது உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.