இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மின் கட்டணப் பட்டியல்கள்
மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் அந்தக் கட்டணப் பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் இலங்கை மின்சார சபைக்கும் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கணக்கீடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார்.