திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, ராய்ப்பூரைச் சேர்ந்த அஷுடோஷ் கோஸ்வாமி மற்றும் மனிஷா கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, மனிஷாவை கணவர் அஷுடோஷ் அடித்து துன்புறுத்தியதுடன், அவரது குடும்பத்தினரும் அவமதிப்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த துன்புறுத்தலால் மனமுடைந்த மனிஷா, தன்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து துன்புறுத்துவதாக கூறி வீடியோ பதிவு செய்து, பின்னர் தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த வீடியோவில், “திருமணமாகி 10 நாட்கள்கூட மகிழ்ச்சியாக இருக்கவில்லை” எனவும், வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தன்னை ஒடுக்கி வந்ததாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மனிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்கொலைக்கு முன் மனிஷா பதிவு செய்த வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.