கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமைத்த பொருளாதார மத்திய நிலையம் ; விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்ற லாபம்
கிழக்கு மாகாணத்திற்கு என்றே மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தால் தற்போது கிழக்கு மாகாண விவசாயிகள் அதிக லாபம் பெற கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பொருளாதார மத்திய நிலையம் இம்மாதம் 01.02 2025ஆம் திகதியில் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலாளர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார மத்திய நிலையம் பற்றி மேலும் அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ள விடயமானது,
தற்பொழுது சிறந்த முறையில் இயங்கிக் கொண்டுள்ளது. இதனால் எமது பகுதி விவசாயிகள் உங்கள் விளை பொருட்களை இந்த மத்திய நிலையத்தில் கொண்டு வியாபாரம் செய்து பயனடையலாம்.
இதை விடுத்து வேறு எந்த இடத்திற்கும் எமது விளை பொருட்களை கொண்டு சென்றால் இங்கு கிடைக்கும் அதிக விலைகள் மற்ற இடங்களில் கிடைக்காது .
இதற்கு உதாரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பொதுச் சந்தையை குறிப்பிடலாம். எமது பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மூடை மிளகாய் ,மற்றைய மரக்கறிகளும் அவ் சந்தைக்கு கடந்த காலங்களில் கொண்டு செல்லப்பட்டது.
அதை அங்குள்ள ஒரு வர்த்தகர் அங்கு சில்லறையில் விற்பவர்களுக்கு குறைந்த விலையில் சில மூடைகளை கொடுத்துவிட்டு உதாரணத்திற்கு 1 கிலோ 400 இற்கு கொடுப்பது போல் கொடுத்து விட்டு மிகுதியான நூற்றுக்கணக்கான மூடைகள் அனைத்தையும் அங்கு மறைத்து வைத்து இலங்கையில் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து 1kg இற்கு ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக கொடுத்துவிட்டு எம்மவருக்கு அந்த மார்க்கெட்டில் சில்லறைக்கு 400 ரூபாய்க்கு கொடுத்துள்ளேன் என்று கூறி விட்டு அது உங்களுக்கு தெரிந்தது தானே என்று 400ரூபாய்க்கு எமக்கு கணக்கு பார்ப்பார்.
பார்த்துவிட்டு மேலும் 150 ரூபாய் வைத்து உங்களுக்கு தருகின்றேன். என்று சொல்லி அதையும் சேர்த்து 550 ரூபாய்க்கு எமக்கு கணக்கு பார்ப்பார். நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் 400 ரூபாய்க்கு எமது மிளகாய்களைக் கொடுத்துவிட்டு அவரின் பணத்தில் 150 ரூபாய் வைத்து தருவாரா என்பதை சிந்தித்து பாருங்கள். எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கின்றார்கள்.
என்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும். இன்றைய விலையும் (26.02.2025) இணையத்தில் எமது பொருளாதார மத்திய நிலையத்தில் 1000 ஆக மிளகாய் விலை பதிவானது. அதை பார்த்துவிட்டு மேற்சொன்ன சந்தையில் உள்ள வியாபாரி அதே பெறுமதி விலையை அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த பொருளாதார மத்திய நிலையம் இயங்காது இருந்திருந்தால் மேலே குறிப்பிட்டு இருந்தது போன்று இலங்கையில் பல பகுதிகளுக்கும் அதிகமான விலைக்கு கொடுத்து விட்டு எமக்கு ரூபாய் 400 அதோடு 150 ரூபாய் வைத்து தருகிறேன் என்று கணக்கை முடித்து இருப்பார். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
எமது பொருளாதார மத்திய நிலைத்திலிருந்து பல பகுதிகளுக்கும் எமது விளை பொருட்கள் ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கின்றது .எத்தனை நூறு மூடைகளையும் எமது பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வந்தாலும் நாமே எமது விலையை தீர்மானித்து லாபம் அடையலாம்.
அடுத்து இன்னுமொரு முக்கிய விடயம் இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு மத்திய மாகாணத்தில் இருந்து குறிப்பாக வெலிமடை பகுதியில் இருந்து பாரவூர்திகள்(lorry )இங்கு வருகை தந்து கொண்டிருக்கின்றது.
அந்தப் பாரவூர்திகள்(lorry) மத்திய மாகாணத்தில் உள்ள அந்தப் பெரிய பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னர் சென்றிருந்தது தற்போது அதில் அனேக பாரவூர்திகள் (lorry)மலையக மரக்கறிகளை இங்கு கொண்டு வருவதால் மிகவும் லாபமான முறையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யலாம்.
இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளையும், கருவாடு வகைகளையும் , பழ வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.