இலங்கை சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட வெளிநாடு!
இலங்கைச் சிறுவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக நியூசிலாந்து ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்திற்கு (UNICEF) 800,000 டொலர்களை வழங்கவுள்ளது.
இந்த தகவலை நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Nanaia Mahuta டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Pleased to announce ?? is contributing $800,000 to @UNICEF_SriLanka to provide urgent help to Sri Lankan children who have been badly impacted by the country’s economic crisis. #manaakitanga
— Nanaia Mahuta (@NanaiaMahuta) June 23, 2022
நியூசிலாந்து, சர்வதேச நாணய நிதியம், (IMF) உலக வங்கி (World Bank) உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு மீட்சிக்கான பாதையை வகுக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.