இலங்கையில் புத்தாண்டு கோலாகலம் ; மதங்களை கடந்து மகிழ்ச்சியான தருணம் !
நாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற தலையணை சண்டை விளையாட்டு ஒன்று சமூக வலைத்தளங்கள் வைரலாகியுள்ளது.
மதங்களை கடந்து புத்த பிக்கு ஒருவரும் கிருஸ்தவ பாதிரியாரும் தலையணை சண்டை விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான விளையாட்டு கொழும்பில் இடம்பெற்றதாக தெரியருகின்றது. இந்த ஒற்றுமையும் மகிழ்ச்சியும்” இலங்கையின் எல்லா இடங்களிலும் உண்டு - இவை அரசியல் இலாபங்களுக்காக பலமுறை மறைக்கப்பட்டு வெறுப்புகள் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதே உண்மை என சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார ஆட்சியில் , இலங்கையில் மூவின மக்களும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சந்தர்ப்பம் அமைந்துள்ளமைக்கு இந்த புகைப்படங்களே எடுத்துக்காடாகும்.