225 எம்.பிக்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபயவிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் விரைவில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், முதலில் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்றும் தற்போது உள்ள வாகனங்களைப் பயன்படுத்தும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் தற்சமயம் வாகனங்கள் தேவைப்படுவதாக பல மாதங்களாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துவந்த நிலையில், அதற்கான அனுமதியை அவர் அளித்திருப்பதாக அந்த தகவல் கூறுகின்றது.
அதன்படி இலங்கை வங்கியின் ஊடாக வாகன இறக்குமதிக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ஆவணங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.