உடனடியாக நிறுத்துங்கள் ; யாழில் முக்கிய பகுதியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக, உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கை
குறித்த அறிவிப்பை மீறிச் செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தினூடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்திருந்தார்.
லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய காகிதம் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.