வத்திக்கானின் புதிய தலைவர் பாப்பரசர் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார்
உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதால் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
White smoke! The 133 Cardinal electors gathered in the Vatican’s Sistine Chapel have elected the new Pope. He will appear soon at the central window of St. Peter’s Basilica. pic.twitter.com/XejI7mY43m
— Vatican News (@VaticanNews) May 8, 2025