இலங்கையில் புதிதாக உருவாகும் கூட்டம்! கவலையை வெளியிட்ட சம்பிக்க
இலங்கை பொருளாதாரம் ஐந்தில் ஒரு பங்காக சுருங்கியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது மிகவும் ஆபத்தான நிலை என்றும், இதனால் புதிய ஏழை மக்கள் கூட்டம் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று எரிபொருளுக்கான முறைமை உள்ளதாகவும், எரிபொருள் பாவனை 20-24 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் பாரதூரமாக உருவாகியுள்ளதாகவும் இன்னும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஊழியர் ஒப்பந்தத்தை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டதாகவும், ஆனால் பல்வேறு சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், இது மிகவும் உணர்ச்சிகரமான விடயம் என்பதை நினைவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து அரசாங்கம் கடனாகப் பணத்தைப் பெற்று அதனை தனியார் மயமாக்கியுள்ளதாகவும், இது தொடர்ந்தால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.