கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இஷாரா செவ்வந்தி எனப்படும் குறித்த பெண் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும், சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறியமைக்கான எதுவிதமான ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் இருப்பிடம்
குறித்த சந்தேக நபர் 243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு சாலை, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிப்பதாகவும், தேசிய அடையாள அட்டை எண் 995892480V என்பதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப்பிரிவின் 071-8591727 அல்லது 071-8591735 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் முடிவு செய்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.