பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியான புதிய புகைப்படம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான்.
இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 4 சீசன்கள் கடந்து 5 வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 யில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று ஆரம்பமாகும் பிக்பாஸ் 5 சீசனில் கலந்துகொள்ளும் 17 பேட்டியாளர்களின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டில் பேட்டியாளர்கள் தங்கும் அறையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.