உருவான புதிய கூட்டணியின் பெயர் TNA ஆ அல்லது DTNA ஆ? குழப்பத்தில் மக்கள்
தமிழ் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த கூட்டணி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் புதிய கூட்டனியின் பெயர் TNA என இல்லாது, DTNA என உள்ளது.
TNA? DTNA?
இந்நிலையில் புதிய கூட்டணியின் பெயர் TNA? ஆ அல்லது DTNA? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
அதேவேளை சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் தமிழ் மக்கள் கூட்டணியை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்திருந்தனர்.