கல்வி மற்றும் சுகாதார சேவை குழுக்களில் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்
இலங்கை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்வி மற்றும் சுகாதார சேவைக் குழுக்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த (31.10.2023) அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இன்று (02.01.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு அரசியலமைப்பின் 56(1) மற்றும் 56(2) ஆகிய பிரிவுகளின்படி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நியமனம் பெற்றுள்ளோர்
இதன்படி, சுகாதார சேவைக் குழுவிற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி.எம்.எல்.சி. சேனாரத்ன தலைவராகவும், கலாநிதி ஆனந்த ஹபுகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கல்வி சேவைக் குழுவிற்கு ஜே.ஏ.ரஞ்சித் தலைவராகவும், ஏ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.என்.கே.வீரசேகர, டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.