மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் புதிய சலுகை
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை) ரூ.300,000 ஆகவும், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி இப்போது ரூ.1.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காப்புறுதியில் இப்போது நிரந்தர ஊனத்திற்கு ரூ.200,000, நிரந்தரப் பகுதி ஊனத்திற்கு ரூ.150,000 மற்றும் தற்காலிக ஊனத்திற்கு ரூ.100,000 வரை அடங்கும்.