ஜனாதிபதி ரணிலை திடீரென சந்தித்த இலங்கை முக்கியஸ்தர்!
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா (Priyan Perera) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesighe) சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் (19-12-2022) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்றைய தினம் (18-12-2022) தனது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய கடற்படைத் தளபதி, பதவியேற்றதன் பின்னர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததுடன், நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
இதேவேளை, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.