சிறைச்சாலை திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்
சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லேதென்ன (Senaka Palletenna) நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு ஊடகப் பேச்சாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பல்லேதென்ன இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகவும், சிறைச்சாலை திணைக்களத்தின் பயிற்சி பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்தடிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும், இந்தியாவின் கேரளாவில் திருத்தம் மற்றும் புனர்வாழ்வு மேலாண்மை குறித்த டிப்ளோமாவையும் முடித்துள்ளார். இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான பல டிப்ளோமாக்களையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
அவரது கல்வி மற்றும் தொழில்சார் அனுபவமானது, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், புனர்வாழ்வு மற்றும் திருத்த மேலாண்மை தொடர்பான பரந்த பயிற்சியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.